பச்சை நிற SPRITE இனி விற்பனைக்கு இல்லை?...
'Sprite' என்றாலே அந்தச் சுவைபானத்தின் பச்சை நிற போத்தல்தான் கண்ணில் வந்து நிற்கும்.
பானத்திற்கு நிறமில்லை என்றாலும் போத்தலின்
நிறம் இன்றியமையாத அம்சம் என்றே சொல்லலாம்.
அதனை அகற்றவிருப்பதாக Coca-Cola நிறுவனம் கூறியுள்ளது.
'Sprite' போத்தல்களில் இனி நிறம் இருக்காது.
அடுத்த மாதம் முதல் தேதி அது நடப்புக்கு வரும் என்று CNN செய்தி நிறுவனம் கூறியது.
'Sprite' போத்தல்களுக்குப் பச்சை நிறத்தைக் கொடுப்பதற்கு green polyethylene terephthalate எனும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.
அதை மறுபயனீடு செய்யமுடியாது.
பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க விரும்பும் நிறுவனம் அந்த ரசாயனம் இனி சேர்க்கப்படமாட்டாது என்று கூறியது.
நிறம் இல்லாத போத்தல்கள் மறுபயனீட்டுப் பொருள்களின் தரத்தை உயர்த்தக்கூடியவை.
சுற்றுப்புறத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாகக் Coca-Cola நிறுவனம் அவ்வப்போது குறைகூறப்பட்டு வந்துள்ளது.
