Header Ads

Breaking News
recent

மக்கள் பிரதிநிதியின் சிறப்புரிமையை புறக்கணித்த பிரதேச சபை : உப தவிசாளரது பணியினை செய்யவிடாமல் தடுத்த தவிசாளர்.

ரவ்பீக் பாயிஸ்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதியான சபையின் உப தவிசாளருக்கு தமது கடமைகளை செய்ய விடாது உப தவிசாளர் அறையினை பூட்டி சர்வாதிகாரமாக சபையின் தவிசாளர் தடுத்ததாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உபதவிசாளர் முகம்மட் நௌபர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சபையின் உப தவிசாளர்...

சம்பவ தினமான இன்று மாதாந்த சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 8.45 மணிக்கு பிரதேச சபையின் உப தவிசாளருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்புரிமையில் ஒன்றான உப தவிசாளருக்கு வழங்கப்பட்ட உப தவிசாளர் அறைக்கு சென்றபோது தனது உத்தியோகபூர்வ அறையின் கதவு மூடி இருந்ததாகவும் உத்தியோகத்தர்கள் மற்றும் செயலாளரிடம் கதவை யார் மூடியது என்று உப தவிசாளர் வினவியபோது தங்களுக்கு தெரியாது என அலுவலக அதிகாரிகள் பதிலளித்தமாகவும் பின்னர் சபையின் தவிசாளரிடம் குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது சபையின் தவிசாளர் "நான்தான் மூடினேன் கதவினை திறக்க முடியாது,உப தவிசாளர் அறையினை நீங்கள் பயன்படுத்த முடியாது" என்று சர்வாதிகாரமாக நடந்து கொண்டதாக சபையின் உப தவிசாளர் முகமட் நௌபர் தெரிவித்தார்.

மேலும் இன்றைய தினம் சபையின் கடமைகளை உப தவிசாளர் அறையின் நடைபாதையில் செய்ததாகவும் தனது காலை உணவை தரையில் வைத்து உண்டதாகவும் சபையின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு மக்கள் பிரதிநிதியின் சிறப்புரிமையை மீறி செயல்படும் சபைையின் தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் உப தவிசாளரின் கடமைகளை செய்ய விடாமல் தடுத்த குறித்த சபைை பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறித்த சபைையின் தவிசாளர் மீீது பாரபட்சமின்ற விசாரணை நடத்தி குறித்த சபைையின் நடுநிலைையை நிலைநாட்டுமாறும் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.