Header Ads

Breaking News
recent

ஆள் கடத்தலை தடுக்க கிழக்கில் செயல்பாட்டு பொறிமுறையை நடைமுறைப்படுத்த உத்தரவு : கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்...



ரவ்பீக் பாயிஸ்
கிழக்கு மாகாணத்தில் ஆள் கடத்தலை முற்றுமுழுதாக தடுக்க விசேட செயற்பாட்டு பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் காரியாலயத்தில் ஆம்கோர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “மனித கடத்தலுக்கு எதிராக அரசாங்கத்தையும் சமூகம் சார்ந்த அமைப்புகளையும் வலுவூட்டுவதன் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில் குறித்த பொறிமுறையை வழிநடத்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அறிவித்தல்கள் வழங்கி அதற்கு அவர்களின் ஆதரவை வழங்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

குறித்த நிகழ்வில் ஆள் கடத்தலைத் தடுக்க அமோர் நிறுவனம் எடுத்துள்ள தற்போதைய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன்

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் ஆள் கடத்தலை தடுக்க அரசு அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதன்போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, ஆம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் பி.முரளிதரன், சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் திருமதி மேரி மௌரீன் லம்பேர்ட் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.