வெளிநாட்டு உதவியின் கீழ் பெறப்படும் பணத்தில் கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாண அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் உலக வங்கியின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுக்கு அறிவிக்கும் விசேட சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தின் மூலம் நாட்டில் பல தேவையற்ற கட்டிடங்கள் அமைக்கப்பட்டு அவை உரிய முறையில் பராமரிப்பின்றி பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு வெளிநாட்டு பணம் மூலம் அமைக்கப்படும் கட்டுமான பணிகளினால் இடம்பெற்ற ஒரே பலன் கட்டுமான ஒப்பந்ததாரர்களை வளப்படுத்துவது மட்டுமே என கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த கிழக்குமாகாண ஆளுநர்
“உலக வங்கி உதவியின் கீழ் பெறப்பட்ட பணத்தில் மிகவும் வசதியான திட்டங்களுக்குச் செல்லுங்கள். கட்டுமானத்திற்கு பின் செல்ல வேண்டாம். எங்கிருந்தோ பணம் வரும்போது கட்டிடம் கட்டவோ, சாலை அமைக்கவோ, கான்கிரீட் சாலைக்கு தார் போடவோ பழகிவிட்டோம். இதுவரை அப்படித்தான் செய்து வந்தோம். இவற்றின் விளைவுகளை நாம் இப்போது பெற்றுள்ளோம். எனவே இனிமேல் அதை செய்யாதீர்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் பல உள்ளன. இதுபோன்ற திட்டங்களுக்கு விரைவில் செல்லுங்கள்,'' என குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடம் கிழக்கு மாகாண ஆளுநர் தெளிவுபடுத்தினார்
மேலும் குறித்த சந்திப்பில் பிரதம செயலாளர் ஆர்.எம்.எஸ்.பி ரத்நாயக்க, பிரதம அமைச்சின் செயலாளர் கலமதி பத்மராஜா, ஆளுநர் செயலாளர் எல்.பி. மதநாயக்க, உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.மணிவண்ணன், உலக வங்கியின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்
கது.