14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ! திருமலையில்
(அப்துல்சலாம் யாசீம்)
14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் சந்தேக நபரை இன்று (13) ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் சீனக்குடா-சுமேதங்கரபுர பகுதியைச் சேர்ந்த ல்.ஜீ. எச்.அசேன் சந்திக்க (21 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோர்களினால் தேடப்பட்டு வந்த சிறுமி பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
