திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
(அப்துல்சலாம் யாசீம்)
திருக்கோணமலை-இலிங்கநகர் பகுதியில் உள்ள கலப்பு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (13) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இலிங்கநகர் முதலாம் ஒழுங்கையைச்சேர்ந்த குட்டி என்று அழைக்கப்படும் கார்த்தீபன் (34 வயது) எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது,
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மனைவியோடு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இன்றைய தினம் நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளதாகவும் கண் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் கலப்பு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
இவருடைய மரணம் கொலையா அல்லது இயற்கை மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு சென்றுள்ளதாகவும், மரணம் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
