இவ்வருட முதல் 15 நாட்களில் 142 பாலியல் வன்புணர்வுகள்
இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வு வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த சபை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் மொத்த பாலியல் வன்புணர்வு வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும் ஒரு சிறிய சதவீத வழக்குகள் மட்டுமே நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வரை செல்கின்றன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் பலமுறை உறுதியளித்த போதிலும், இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகமாக இருக்கின்றன
என்று சர்வதேச மன்னிப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்
A.H.M. சஜாத்
