Header Ads

Breaking News
recent

மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 2 ஆவது T20 வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 157 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

கண்டி பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தசுன் சானக 31 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஃபேபியன் ஹெலன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Powered by Blogger.