Header Ads

Breaking News
recent

பிரதமர் வெளியிட்ட தகவல்

பொதுத் தேர்தலின் பின் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

அத்துடன் பொதுத் தேர்தலுக்குப் பின் 19ஆவது திருத்தத்தை இரத்து செய்யும் புதிய திருத்தத்தைக் கொண்டுவரவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.

மேலும் வரும் பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி சார்பில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முதளிதரனின் சகோதரன் முத்தையா பிரபாகரன் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்பதையும் அவர் இதன்போது அறிவித்தார்.
Powered by Blogger.