இத்தாலி நாட்டைச் சேர்ந்த இருவர் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
(அப்துல்சலாம் யாசீம்)
இத்தாலி நாட்டைச் சேர்ந்த இருவர் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் இன்று பிற்பகல் 12 30 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரையும் தனியான அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான நோய்களை கண்டறிவதற்காக விஷேட வைத்திய நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இவர்கள் 35 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் தெரிவித்தனர்.
