ஆணொருவரின் சடலம் மீட்பு : ரொட்டவெவ
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-ரொட்டவெவ காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (15) மாலை 6.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் வவுனியா- பாவற்குளம்-அவரன்துலாவ நான் எவ்வளவு பகுதியைச் சேர்ந்த உக்குனைதேகே சைமன் அப்பு (70 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- மஹதிவுல்வெவ மற்றும் புலியகுளம் காட்டுப் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட ஜங்கள் பயணத்தின்போது சிவப்பு டீசர்ட் மற்றும் நீல சாரம் அணிந்த நிலையில் ஆண் ஒருவர் விழுந்து கிடப்பதை அவதானித்த நிலையில் இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு உள்ளதாகவும் சடலம் காட்டுப் பகுதியில் சொக்கோ பொலிசார் விசாரணைகளை முன்னெடுக்கும் வரை வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்துக்கு அருகில் அவரது அடையாள அட்டை பெறப்பட்டதாகவும் உணவு உட்கொண்டவாறு வீழ்ந்து கிடப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.