குளிக்கச் சென்ற சிறுவன் மரணம் : தோப்பூர்
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை தோப்பூர் பாலத்தோப்பூர் பகுதியில் வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற 8 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த அர்ஷாட் அஹ்மட் என்று அழைக்கப்படும் 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
