திருகோணமலை கிண்ணியா பகுதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்திய பின்னர்!
( அப்துல்சலாம் யாசீம்)
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது அடுத்து திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் வரிசை வரிசையாக நின்று மரக்கறிகளையும், வங்கிகளில் பணங்களையும் பெற்றுக் கொள்வதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை சிலர் முகமூடிகளை அணிந்து கொண்டும் சிலர் முகமூடிகளை அணியாத வண்ணமும் இருப்பதையும் அதனை பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் முகமூடிகளை அணியுமாறும் பொதுமக்களிடம் ஞாபகமூட்டிய வண்ணம்க் உள்ளனர்.
அத்துடன் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களுக்கு சென்று முகமூடிகள் அணிந்து விரைவாக வீடுகளுக்கு செல்லுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதை போன்று மக்கள் அதிக அளவில் நடமாட வேண்டாம் எனவும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பிரதேச சபை மற்றும் நகரசபை அதேபோன்று பொலிசார் பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக தெளிவூட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.