கூட்டமைப்பினர் திருமலையில் சந்திப்பு; வேட்பாளர் நியமனம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெற்றது.
திருகோணமலையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் வீட்டில் கூட்டம் இடம்பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் பட்டியல் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு இதுவரை முற்றுப்பெறவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ச.குகதாசன் போட்டியிடவுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற கட்சியின் வேட்பாளர் நியமனக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஏழு ஆசனங்க ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாவிதன்வௌி பிரதேச சபை தவிசாளருமான தவராஜா கலையரசன் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார்.