தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சீல்
கொரோனா அச்சம் காரணமாக பாணந்துறையில் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது . பாணந்துறையை சேர்ந்த கற்பிணிப் பெண் ஒருவரின் வீட்டுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த அவரின் உறவினர்கள் சில நாட்கள் தங்கி சென்றுள்ளனர்.

ஆனாலும் அப்பெண் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை மீறி பல வெளியிடங்களுக்குச்சென்றுள்ளார் .
பரிசோதனைக்காக பாணந்துறை தனியார் வைத்தியசாலை கர்ப்பிணிமார்களுக்கான கிளினிக் ஒன்றும் சென்றுள்ளார் .இதன்போது இப்பெண் அவர் தொடர்பான உண்மை நிலைகளையும் வைத்தியருக்கு மறைத்துள்ளார் .
சில நாட்களில் இக்கர்ப்பிணிப்பெண்ணுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவே IDH வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
சீல்வைத்து மூடப்பட்ட பாணந்துறை வைத்தியசாலையில் அனைவரையும் தனிப்பட்டு இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது .
சீல்வைத்து மூடப்பட்ட பாணந்துறை வைத்தியசாலையில் அனைவரையும் தனிப்பட்டு இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது .