வீட்டிற்குள் உறவினர்கள் உள்பட யாரையும் அனுமதிக்காதீர்கள்- பிரதமர் மோடி உரை
டெல்லி: உறவினர்கள் உள்பட யாரையும் அனுமதிக்காதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் இன்றிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
