திருகோணமலையின் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த முதலாவது கொரோனா சந்தேக நபர் : மட்டக்களப்பிற்கு அனுப்பிவைப்பு!
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கந்தளாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் டி. ஜீ. எம்.கொஸ்தா தெரிவித்தார்.
கொரோனா நோய்க்குறிய அறிகுறிகள் காணப்படுவதாகவும், ஹபரன ஹோட்டலில் உல்லாசப்பிரயானிகளுக்கான வழிகாட்டியாக செய்யப்பட்டவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் கந்தளாய்-ஜயந்தி புர, பகுதியைச் சேர்ந்த (20வயது) நபர் எனவும் தெரியவருகின்றது.
கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
கந்தளாய் வைத்தியசாலை அத்தியட்சகர்
