Header Ads

Breaking News
recent

நாடளாவிய ரீதியில் 130 பேர் கைது !!

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் நாடுமுழுவதும்ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டவிதிகளை மீறிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

அந்த வகையில், உகன பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட  9 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் மூவரிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

18 மற்றும் 60 வயதுகளையுடைய 9 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை உகன நீதவானிடம் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதுடன், உகன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை  ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட  10  பேர் பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம பொலிஸாரினால்   இன்று  முற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரகம நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன்  பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், ஹட்டன் பிரதேசத்தில் ஊரடங்கு சட்ட விதிகளை மீறி செயற்பட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், நேற்று இரவு 11 மணி அளவில், அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஸ்ட்ரெதன் தோட்டம் மற்றும் மல்லியப்பு ஆகிய பிரதேசங்களில் இந்த மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், கருவலகஸ்வேவ பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 11.30க்கும் 12.30க்கும் இடைப்பட்ட காலத்தில் கருவலகஸ்வேவ பிரதேச பிரதான வீதியில் நடமாடிக் கொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 20, 21 மற்றும் 23 வயதுகளை உடைய புத்தளம் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வேவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட மேலும் இருவர் அக்மீமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்மீமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்தை மற்றும் தொட்டகொட ஆகிய பிரதேசங்களில் ஊரடங்கு சட்ட காலத்தில் பாதையில் நடமாடிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இருவரில் ஒருவரிடம் காணப்பட்ட இரண்டு லீற்றர் மதுபானமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொட்டகொட மற்றும் பின்னதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பண்டாரவளை, பொரவகலை பகுதியில் ஊரடங்கு சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 முதல் 56 வயதுகளுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை பண்டாரவளை நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்று இரவு உணவு விடுதி ஒன்றினை திறந்து, வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய ஹல்துமுல்லை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தங்காலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது, இவ்வாறு வெளியில் பயணித்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப் பகுதியில் வெளியில் நடமாடிய கட்டுநாயக்க பகுதியில்  இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

43 மற்றும் 44 வயதுகளை உடைய எப்பாவெல, மினுவாங்கொட பகுதிகளை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி சந்தேகநபர்களை இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், அதன் விதிமுறைகளை பின்பற்றுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, தம்புள்ள பகுதியில் ஊரடங்கு சட்ட விதிகளை மீறி செயற்ப்பட்ட குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 முதல் 50 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரினால், தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, வலஸ்முள்ள பகுதியில் 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிப்பர் வாகனம் ஒன்றில் பயணித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவர்கள் பயணித்த டிப்பர் வாகனமும் பொலிஸாரின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேபோன்று நல்லதண்ணி மற்றும் அம்பாறை பிரதேசங்களில் ஊரடங்கு சட்ட விதிகளை மீறி செயற்ப்பட்ட குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர்  நேற்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்கள்,  நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில்  வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பொலிஸ்  ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா  அதிபர் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு  அரசாங்கம்  நடைமுறைப்படுத்தியுள்ள  முயற்சிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.