Header Ads

Breaking News
recent

ஏழைகளுக்கு உதவ ஏதும் திட்டங்களை வகுத்துள்ளீர்களா? நீங்களும் உதவலாம் எம்மோடு இணையுங்கள் :

உங்களது பிரதேசங்களில் அன்றாடம் கூலித் தொழில் செய்து வருபவர்கள் கொரோனா வைரஸ் விவகாரத்தின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதற்காக திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

உங்கள் ஊர்ப் பகுதிகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உதவ ஏதும் திட்டங்களை வகுத்துள்ளீர்களா?

இதுவரை பலரும் தனிப்பட்ட முறையில் உதவிகளை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட பலர் தமது தேவைகளை முறையிட வெட்கப்படலாம்.

இது பற்றி கலந்தாலோசித்து முடிவெடுக்க ஏற்கனவே இப் புனித பணியை முன்னெடுப்பதட்க்கு Max Tamil Media உதவும் கரங்கள் குழுமம் தயாராகி வருகின்றது. 


மாஷா அல்லாஹ்!

அக்குழுவில் அல்லாஹ்வின் நல்லருளால் நல்ல உள்ளங்கொண்ட இளைஞர்கள் இறங்கி  இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்,
அவர்களுக்கு முடியுமான ஒத்துழைப்பை வழங்குவோம். அல்லாஹ் எம்மை ஒற்றுமைப்படுத்தி நல்லருள் புரிவானாக.''ஆமீன்''

இந்த சந்தர்ப்பத்தில் யாரையும் கேட்கும் வரை இருக்காமல் குறித்த குழுவுடன் தொடர்பு கொண்டு எம்மாலான முடிந்த உதவியைச் செய்வோம்.

மற்ற ஊர்களில் இலட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டாட்டங்கள் ஆட எமதூரில் இளைஞர்கள் காலத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் மிகப் பொருத்தமான வேலையில் இறங்கியுள்ளார்கள்.
யா அல்லாஹ் இவர்களையும், இவர்களுக்கு உதவி செய்யும் நல்லுள்ளங் கொண்ட தனவந்தர்களையும்  மன்னித்து அவர்களது வியாபாரம் குடும்பம் குடும்ப வாழ்க்கை என்பவற்றில் உறுதியாக்கி ஈருலகிலும் உனது அருளை வழங்குவாயாக.
ஆமீன் ஆமீன்"
''முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” 
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அதீ பின் ஹாத்திம் (ரலி),
நூல் : புகாரி 6539

பயணிக்க இருக்கும் இடங்கள் 
கப்பல்துறை/தம்பலகாமம் 
கன்னியா/துவராங்காடு 
ஜமாலியா/நிலாவெளி


நன்றி 
Max Tamil Media 
உதவும் கரங்கள் 
குழுமம்
தொடர்புகளுக்கு :
075-488 9999

Powered by Blogger.