திருமலையில் : ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களை கைது
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
![]() |
| Photo : Google |
இச்சம்பவம் நேற்றிரவு (09) 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காலி-பன்னலமுல்ல, கெகுலுகஹவத்த பகுதியைச் சேர்ந்த சித்தாதகே சமிந்த (35வயது) மற்றும் சித்தாதகே சந்தன (33வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் கே. எம். ஷாபி தலைமையிலான விசேட பொலிஸ் குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இருவரை கைது செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர் தொடர்பில் முன் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
