Header Ads

Breaking News
recent

ஊவா மாகாண ஆளுநர் விசேட அறிவிப்பு...!



ஊவா மாகாணத்தில் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது குறித்து கவனஞ் செலுத்துமாறு ஊவா மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே மாநகர சபைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, இது குறித்து மாநகர சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, உள்ளூராட்சி நிதியத்தின் ஊடாக நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், உள்ளூராட்சி நிதியத்தின் ஊடாக மக்களுக்கான சேவைகளை மேற்கொள்வதெனில், கிராம சேவகர்களின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தான் எழுத்துமூல அனுமதியை வழங்குவதாகவும் ஊவா மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.