இலங்கையில் சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு !
புத்தளம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசங்களுக்கு அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸ் பிராந்தியத்தில் 11 பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபத்தில் 7 பொலிஸ் பிரிவுகளிலும் நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று மலை 4.30முதல் மறுஅறிவித்தல் வரை இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேட்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
