சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது ! மனித புதைகுழி வழக்கு
மனித புதைகுழி வழக்கில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில்
சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராக முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்
மற்றும் அரச தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராக முடியும் என நீதவான்
அறிவித்துள்ளார்.
எனினும்,
பாதிக்கப்பட்டவர்கள் என்ற கற்பனை கதாப்பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு,
காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராக
முடியாது என மன்னார் நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் எம்.கணேசராஜா கட்டளை பிறப்பித்துள்ளார்.
