மட்டக்களப்பு கொரோனா ஆர்ப்பாட்டம் வெற்றி
மட்டக்களப்பு வைத்தியசாலை கொரோனா சிகிற்சை நிலையமாக மாற்றப்பட்டமைக்கு எதிப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து கிழக்கு மாகாண ஆளுனரின் தலைமையில் வைத்திய சாலை உயர்மட்ட குழு கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதன்போது மட்டக்களப்பு வைத்திய சாலையில் கோரோனா நோயாளர்களை அணுமதிக்க மாட்டோம் என்றும் புணானை பல்கலை கழக வளாகம் கொரோனா தொற்று பரிசோதணை செய்யும் நிலயமாக இயங்குவதாகவும் அங்கு பரிசீலிக்கப்பட்டுஉறுதி செய்த பின்னர் நோயாளர்கள் கொழும்பிற்கு சிகிச்சைக்காக அனுப்புவதாகவும் முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.