யாழில் கொரோனா பரவும் அறிகுறி !!!
சுவிஸ்ஸர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்த கிறிஸ்தவ மதபோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவர் கடந்த நாட்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.எனினும்,அவர் நாட்டில் இருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஆராதனை ஒன்றினை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
இதன்போது, அதிலே 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
எனவே இதனை கவனத்தில் கொண்டு, துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த ஆராதனையில் பங்கேற்றவர்களை உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும், வைத்தியசாலையில் அவர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்தார்.
மேலும், பதிவுகளை முன்னெடுக்கும் வகையில் அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0212217278 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உறுதி செய்யப்பட மேலதிக தகவல்களுக்கு
021-2217278
