Header Ads

Breaking News
recent

ஒரே சூலில் 03 சிசுக்களை பிரசவித்த பெண்!



அம்பாறை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிந்தவூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒரே சூலில் 03 சிசுக்களை நேற்றிரவு (17) பிரசவித்துள்ளார்.

நேற்று காலை பிரவச வலி என்று 29 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றையதினம் இரவு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 03 சிசுக்களை பிரசவித்துள்ளார். ஒரு பெண் சிசுவும் 02 ஆண் சிசுக்களும் இவ்வாறு கிடைத்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தாயும், சேய்களும் நலமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் பெண் சிசு 2620 கிராம் நிறையும் ஆண் சிசுக்கள் தலா 2410 கிராம், நிறையும் உடையதாக உள்ளன.

கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகள் வரவு குறைவடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(பாறுக் ஷிஹான்)
Powered by Blogger.