Header Ads

Breaking News
recent

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 197 சந்தேக நபர்கள் கைது

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விடுபட்ட இடத்திலிருந்து தொடரப்பட்ட விசாரணைகளுக்கமையவே கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயங்கனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுடன் இவர் நேரடியான தொடர்பை முன்னெடுத்திருப்பதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவிற்கு அன்பளிப்புக்களை வழங்கியிருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 119 பேர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (14) கைது செய்யப்பட்டவர்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் எனும் சட்டத்தரணி ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மற்றும் மேலும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவர்களில் ஒருவர் சுங்கத் திணைக்களத்தில் பணி புரிவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.