Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் சமூக இடைவெளியை பயன்படுத்தி மக்கள் பொருட்கள் கொள்வனவில்

(அப்துல்சலாம் யாசீம்)
நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இருக்கின்ற வேளையில் திருகோணமலையை நகர்ப்பகுதிகளில் தற்பொழுது வியாபார நடவடிக்கைகள் போட்டியாக இடம்பெற்று வருகின்றது.

திருகோணமலை அனுராதபுரம் சந்தி தொடக்கம் மட்டிக்கழி, பஸ் தரிப்பிடம், பொதுச்சந்தை வரைக்கும் வீதி இரு ஓரங்களிலும் மரக்கறி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக சமூக இடைவெளியை பயன்படுத்தி மக்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் இடங்களில் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றனர். 

இதேபோன்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரனின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந்தின் நேரடி கண்காணிப்பில் கீழ் பொது சுகாதார பரிசோதகர்கள் பொது மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும் என பொது சந்தை மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் இடங்களுக்கு சென்று அறிவூட்டல்களையும்,விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் திருகோணமலை மீன் சந்தை பொது பஸ் தரிப்பிடத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து மக்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும், மீன்களின் விலைகளை குறைத்து விற்பனை செய்வதாகவும் மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Powered by Blogger.