கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 245 பேர் கைது!!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் காலை 6 மணி முதல் இன்றைய தினம் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஆயிரத்து 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு 336 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த 20 ஆம் திகதி முதல் இன்றைய தினம் காலை வரையிலான காலப்பகுதியில் 13 ஆயிரத்து 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 3 ஆயிரத்து 353 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கபபட்டுமெனவும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.