அஞ்சல் தினைக்களத்தினால் கிளினிக் நோயாளர்களுக்கான மாத்திரை வழங்கும் வேலைத்திட்டம்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்திய சாலைகளுக்கு செல்ல முடியாத கிளினிக் நோயாளர்களுக்கான மாத்திரை வழங்கும் வேலைத்திட்டம் இலங்கை அஞ்சல் தினைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.
அதனடிப்படையில் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் அவர்களின் வழிகாட்டலில் கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் திருகோணமலை வைத்தியசாலைக்குச் செல்லும் கிளினிக் நோயாளர்களுக்கான மாத்திரைகளை வழங்கும் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக ஞாயிறு தினமான இன்றும் (5-04-2020) கிண்ணியா(po)- குறிஞ்சாக்கேணி(po) மகருகிராமம்(spo)- வெள்ளைமனல்(spo) -முள்ளிப் பொத்தானை(spo)- தம்பலகாமம்(spo)-வான்எல (spo) போன்ற தபாலக ஊழியர்களினால் அவர்களின் வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்வதற்கான மாத்திரைகளையும் விவசாய ஓய்வூதிய கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான கொடுபனவு வவுச்சரும் மாவட்ட தபால் அதிகாரியால் வழங்கப்பட்டது.


