Header Ads

Breaking News
recent

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல், உலகம் முழுவதும் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள்.

உலகம் முழுவதும் 70லட்சம் எதிர்பாராத கர்ப்பகள் உருவாகும் என்று ஐ.நா.அமைப்பு நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் COVID - 19 வைரஸ் தாக்கத்தினால் பெரும்பாலான நாடுகளில் இதுவரை ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில்.இதன் தாக்கம் குறித்து மக்கள் தொகை நிதியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அவ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கொரோனா தாக்கத்தின் எதிர் வினையும் உலகம் எவ்வாறு இதிலிருந்து விடுபடுவதும்  கேள்விக்குறியாகியுள்ள நிலையில் பெண்களின் நலன்களையும் உரிமைகளும் பாதுகாக்காவிட்டால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்த இவ் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கொரோனா அச்சத்தின் காரணமாக வழமையான பரிசோதைகளுக்கு கூட வைத்தியசாலை செல்வதில்லை,ஊரடங்கு காரணமாக பொருட்கள் வருகையும் தடைப்பட்டுள்ள நிலையில் கருத்தடை சாதணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவ கூடும் எனவும். குறைந்த,நடுத்தர வருவாய் கொண்ட 114 நாடுகளில் சுமார் 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என அந்த அறிக்கை சுற்றிக்காட்டியுள்ளது. மேலும் இவ் கருத்தடை சாதனங்களின் தட்டுப்பாடால் வரும் மாதங்களில் 70லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 மாதங்களில் 3கோடியே 10 லட்சம் ஆண்கள் பெண்களிடையே மோதல் சம்பவங்கள் இடம்பெறக்கூடும் எனவும் குழந்தை திருமணங்கள் லட்சக்கணக்கில் அதிகரிக்க இந்த ஊரடங்கு வழிவகுக்கும் எனக்கும் இவற்றையெல்லாம் தடுப்பதற்கு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.