இலங்கை கடற்படைப் பிரிவில் முக்கிய பதவிக்காக பயிற்சி பெற்று வரும் எமது கல்பிட்டி பிரதேசத்தின் இளைஞன் !!
(S. M. ஹிசாம்)
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் M.A.C.A.முத்தலிப் அவர்களின் மகன் முஹம்மது மஹ்ரிஜ் அவர்களுக்கு கல்பிட்டி மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை கடற்படைப் பிரிவின் 2020 விஷேட விளம்பரத்தின் ஒரு பகுதியாக இங்கு வழங்கப்பட்டுள்ள பதிவில் கல்பிட்டியைச் சேர்ந்த Mohamed Mahrij அவருடைய ஆற்றல் அவருடைய திறமை அவருடைய பயிற்சியின் ஒரு பகுதியை இங்கு பதிவிடப் பட்டுள்ள விசேட காணொளியின் மூலமாக காணமுடியும்.
இவ்வாறான துறையில் கல்பிட்டி நகரத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டு கடற்படைப் பிரிவின் முக்கிய பயிற்சியை முடியும் தருவாயில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தத் துறையின் மூலமாக M.Mahrij அவர்களுடைய சேவை இந்த நாட்டுக்கும் எமது பிரதேசத்திற்கும் மிகவும் இன்றியமையாததாக இருக்கவேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
