கா பொ/த சாதாரணதர பரீட்சைக்கு தேற்றிய பெறுபேறுகள் வெளியாகின 74 வீதமானோர் சித்தி!!
(புத்தளம் ஹிசாம்)
இம்முறை மாவட்ட, அகில இலங்கை தரப்படுத்தல் கிடையாது எனவும் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பரீட்சைக்கு தோற்றிய 74 வீதமானோர் சித்தியடைந்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று வௌியிடப்பட்டபெறுபேறுகளுக்கு அமைய ,
9 பாடங்களிலும் A சித்தி பெற்றவர்கள் - 10,346 பேரும்
உயர் தரத்திற்கு தகுதி பெற்றவர்கள் – 74 வீதமானோரும்
கணிதத்தில் சித்தியடைந்தவர்கள் -67 வீதமானோரும் சித்தியடைந்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் 717,246 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்ததாகவும் 556,256 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இம்முறை வெளியிடப்பட்ட சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள், மாவட்ட ரீதியிலான அல்லது அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் வெளியிடப்படமாட்டா துஎன பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
