Header Ads

Breaking News
recent

வவுனியா பிரதேசத்தில் தொடர் கொள்ளை சம்பத்தில் ஈடுப்பட்டு வந்த 5 வர் கைது!!

(வவுனியா விசேட நிருபர்) 
வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மலேசியா சென்றிருந்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது. 

இதன்போது குறித்த வீட்டினை உடைத்து அங்கு சென்ற கொள்ளையர்கள் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தேக்கவத்தை, கற்குழி, நெளுக்குளம், மகாறம்பைக்குளம், கோவில்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. 

இச்சம்பவம் தொடர்பில் 18 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Powered by Blogger.