திருகோணமலையில் உணவைத் தேடி திரியும் மான்கள்!!!
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை கோட்டை பகுதியில் இருந்த மான்கள் அனைத்தும் உணவைத் தேடி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு பிரிந்து செல்வதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் சிறப்பு வாய்ந்த இடமான திருகோணமலை பகுதியில் கூட்டம் கூட்டமாக நின்ற மான்கள் தற்பொழுது உணவின்றி பசியினால் திசை மாறி மக்களைத் தேடி செல்கிறது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து மரக்கறி கடைகளும், ஹோட்டல்களும் மூடப்பட்டிருக்கின்றமையினால் மான்கள் உண்பதற்கு உணவின்றி வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோட்டை பகுதிக்கு வருமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை நகரை அழகுபடுத்தும் மான்களை பாதுகாப்பது அனைவருடைய கடமையாகும்.
எனவே மான்களுக்கு உண்பதற்கு உணவுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


