நாட்டின் சட்டத்தை மதித்து இன மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும்!!

நாட்டின் சட்டத்தை மதித்து இன, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி தெரிவித்தார்.
திருகோணமலை-ரொட்டவெவ கிராமத்தில் இன்று மாலை (03) மொரவெவ பிரதேச சபை சிரேஷ்ட உறுப்பினர் ஏ. எஸ். எம். பைசர் தலைமையில் சமுர்த்தி கிடைக்கப்பெறாத பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் இன, மத பாகுபாடின்றி
எம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும். கொரோனா தாக்கம் முழு உலகத்தையே இனப் பாகுபாடின்றி தாக்கி உள்ளது.
அதனால் நாங்கள் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து ஊரடங்குச் சட்டத்தை மதித்து நமது நலனுக்கு இவ்வாறான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றது என அனைத்து மக்களும் கருத்திற் கொண்டு நாங்கள் அனைவரும் வீடுகளில் இருந்து இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் மொரவெவ பிரதேச சபையின் தவிசாளரும், தெவனிபியவர இந்ராராம விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் வலுவூட்டுவதற்கு இது சிறந்த நேரமெனவும், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் எனவும் குறிப்பிட்டார்.