இன்று முதல் கொரோனா சோதனை தீவிரம் !!

கொரோனா வைரஸ் குறித்து மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை, இன்று (03) முதல் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது வரை இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிப் பழகியவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சமூகத்தில் மேலும் பல தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்பதால், சோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 152 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.