நிவாரண பொதிகள் கையளிப்பு !!
நாட்டில் ஏற்டபட்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததையடுத்து வரிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அநேகமானோர் வாழ்வாதார சிக்கலை எதிர் நோயாக்கியுள்ள இச் சந்தர்பத்தில் ஹொரொவ்பொத்தான ஜம்மிய்யதுல் உலமாவும் மற்றும் பிரதேசவாழ் முக்யஸ்தர்களாலும் (Relief Team Horowpothana) நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதன் போது பாதிக்கப்பட்ட ஹொரொவ்பொத்தான பிரதேசவாழ் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று(20)ஹொரொவ்பொத்தான ஜம்மிய்யதுல் உலமா மற்றும் பிரதேசவாழ் முக்யஸ்தர்களாலும்(Relief Team Horowpothana) வழங்கிவைக்கப்பட்டன.
ரூபா 2000 பெறுமதியான பொதிகள் சுமார் 1500 பேர்களுக்கு இந்நிவாரண பொதிகள் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது .

