Header Ads

Breaking News
recent

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் எட்டு வெளிநாட்டவர்கள் மூன்று ஹோட்டல்களில் சுய தனிமைப் படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்



(அப்துல்சலாம் யாசீம்) 

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில்  எட்டு வெளிநாட்டவர்கள் மூன்று ஹோட்டல்களில் சுய தனிமைப் படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்று   நோய் இருக்கக் கூடும்  என்பதற்காக 
திருகோணமலை  மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளாக வருகை தந்து எட்டு  வெளிநாட்டவர்கள் மூன்று ஹோட்டல்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்

சுய தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டவர்களை ஒவ்வொரு நாளும் மேற்பார்வை செய்து கண்காணித்து வருவதாக பொலிஸார்  தெரிவித்தார்

தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்ட ஹோட்டல்களில் கொரோணா நோய் தொடர்பாக பொஸார்  அறிவுறுத்தல்கள் ஒட்டப்படுவதையும் காணலாம்

சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட இருவர் அதனை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  பொலிஸார்  தெரிவித்தனர்
Powered by Blogger.