ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது:திருகோணமலை
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவு, ரஹ்மானியா நகர் பகுதியில், ஹெரோய்ன் வைத்திருந்த குடும்பஸ்தார் ஒருவர், இன்று (02) திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா ரஹ்மானியா நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 100 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி நபர், கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.