Header Ads

Breaking News
recent

ஜேர்மன் "நம்பிக்கை ஒளி"அமைப்பின் அனுசரணையில் மக்களுக்கான அத்தியவசிய பொருட்கள் வழங்கிவைப்பு

(பிராந்திய செய்தியாளர்
எஸ்.ரி.பிரணவன்)
இன்று 23.04.2020 ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் பிரதான நிதி அனுசரணையில் குறித்த அத்தியவசிய பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் தேவிபுரம் வள்ளிபுனம் குரவயல் மாணிக்கபுரம் கைவேலி புதுக்குடியிருப்பு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில்  வசிக்கும் வறுமைக்குட்பட்ட குடும்பங்களிற்கு அவர்களுக்கான அத்தியவசிய பொருட்களும் மரக்கறி வகைகளும் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த பகுதிகளில் கொறொனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் பொருளாதாரம் மற்றும் அவர்களின் ஜீவநோபாயம் என்பன முற்றாக முடங்கியிருந்த நிலையில் அவர்களை இனங்கண்டு சுமார் 500குடும்பங்களுக்கான  அத்தியவசிய பொருட்களை நம்பிக்கை ஒளி அமைப்பின் முல்லை மாவட்ட செயலர் திரு.வாசன் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக   வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த இன்றைய செயற்திட்டத்தில் மக்களுக்கான பொருட்களை  முல்லை மாவட்டத்தின் சமூக செயற்ப்பாட்டாளர் திரு.ஈசன் மற்றும் Max தமிழ் ஊடக வலையப்பின் பிராந்திய செய்தியாளர் திரு.எஸ்.ரி.பிரணவன் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.

குறித்த அமைப்பானது வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் கல்வி செயற்பாடுகளை முன்னுரிமைப்படுத்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.