கொடிகாமம் கெற்பலி இராணுவ முகாமினுள் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நபர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுநோய் சந்தேகத்தில் கொழும்பில் இருந்து அழைத்து செல்லப்பட்டு யாழ், கொடிகாமம் கெற்பலி இராணுவ முகாமினுள் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நபர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த எம்.ஏ.நசார் (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று(வியாழக்கிழமை) நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கொரோனா சிகிச்சை விடுதியிலிருந்து சாதாரண விடுதிக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென அவர் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினர் அனைவரும் கொடிகாமம் மற்றும் பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.