கொரோனாவை தடுக்க பாரிய முன்னெடுப்புக்கள்!

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் வைத்தியசாலைகளில் பாரிய முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந்த தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டொக்டர் லதாகரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொரோனா நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைகளில் மட்டுமல்லாது பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்கு சென்று கல்வெட்டுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருவதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் கிராமப்புற வைத்தியசாலைகளிலும் குறுநகை தடுக்கும் நோக்கில் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அத்துடன் முகக் கவசங்கள், பாதுகாப்பான ஆடைகள் போன்றவற்றை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை தங்களது வீடுகளுக்கு சென்று எவ்வாறு பேண வேண்டும். முகமூடியின் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்களுக்கு சக ஊழியர்களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கை கழுவும் முறைகள் மற்றும் பாதுகாப்பான முறையில் பற்றி தெளிவு டி வருவதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமஅறும், 10 நிமிடத்துக்கு ஒரு முறையாவது கைகளை சவுக்காரம் குட்டி சுத்தப்படுத்தும்மாறும், சமூக இடைவெளிகளை பேணுமாறும் சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.

