Header Ads

Breaking News
recent

தளர்த்தப்படவுள்ள ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் – மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், ரயில் பயணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை விசேட முறைமையொன்றின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரயில் பயணிகளுக்கு விசேட கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாளை முதல் 400 ரயில்கள் சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

அத்துடன், பயணிகளின் நலன் கருதி நாளை முதல் ஐயாயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து அமைச்ச தெரிவித்துள்ளது.

எனினும், சுகாதார நலன் கருதி பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பேருந்துகளில் பயணிக்க முடியுமான அளவில் இருந்து 50 வீதம் குறைக்கப்பட்டே, பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பிலும், 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரயில் நிலையத்திற்குள் உள்நுழையும் போதும், ரயிலில் பயணிக்கும் போதும், முகக் கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும், ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில் வகுப்புக்களில் எச்சில் துப்புவது முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ரயில்களில் யாசகம் கேட்பது மற்றும் அநாவசியமான வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, எவரேனும் ஒருவர் வர்த்தகர்களிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்தால் அவர்கள் ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இருமல், காய்ச்சல் மற்றும் தடிமல் உள்ளவர்கள், ரயில்களில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் ரயில்வே திணைக்களம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Powered by Blogger.