கந்தளாய்,முள்ளிப்பொத்தானை பகுதியில் திடீர் சுற்றிவலைப்பு !!

நேற்று (01)பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் கந்தளாய்,முள்ளிப்பொத்தானை பகுதியில் பாரிய சுற்றிவலைப்பு மேற்கொள்ளப்பட்டது.
நுகர்வோர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட ஒருகிணைப்பாளர் வசந்த சேகரனின் தலைமையில் இச்சுற்றிவலைப்பு மேட்கொள்ளப்பட்டது .
இதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செமன்டின்கள்,மற்றும் பருப்பு வகைகள் மீட்கப்பட்டதோடு சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கையும்,சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்சமயம் நாட்டில் நிலவும் இவ் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி விற்பனையாளர்கள் பலர் கொள்ளை இலாபத்திற்கு பொருட்களை விற்பதாக பலர் சமூகதளங்களில் விஷனங்களை தெரிவித்து வருவதும்,மேலும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

