கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு பெற்றோரின் வேண்டுகோள் !!

கொரோனா விடுமுறைகால கல்வி செயல் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு பல்வேறு வகையிலான கல்வி வழிகாட்டல்கள் தற்போது வழங்கப் பட்டு வருகின்றன.
எனினும் இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான .இவ்வாறான வழிகாட்டல் செயல்திட்டங்கள் இல்லாததால் இம்மாணவர்கள் எதுவித ஏற்பாடுகளும் இல்லாமல் இருக்கின்றனர்.
எனவே வலயக் கல்வி அலுவலகத்தினால் குறைந்த பட்சம் முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி சகல வகுப்புகளுக்குமான கற்றல் வழிகாட்டல்கள், வினாத்தாள்களை பதிவேற்றம் செய்யுமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஏற்கனவே சில வலயங்கள் இவ்வாறான முன்னெடுப்புகளை செய்து வருவதால் கிண்ணியா வலயமும் இது போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.