மூன்று கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது !

( அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் (07) நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தம்பலகாமம்-முள்ளிப்பொத்தானை, பரகுபுர கம்மான பகுதியைச் சேர்ந்த தலகல திலகரட்ண (63வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட போது அவரிடமிருந்து மூன்று கை குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் அவருக்கு வைத்திருக்குமாறு வழங்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து இராணுவ வீரரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவர் பற்றிய சுய தகவல்களை பெறப்பட்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.