உலக சுகாதார அமைப்பின் "தவறான பரிந்துரை"

அமெரிக்காவின் எல்லைகளை திறந்து வைக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் "தவறான பரிந்துரை" காரணமாக, இப்போது சீனாவை விட அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுகள் அமெரிக்காவில் உள்ளனர் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வ்உஹனில் ஆரம்பித்து, ஒரு உலகளாவிய தொற்றுநோயாக வளர்ந்த நிலையில், உலகத் தலைவர்கள் ஏனைய நாடுகளின் தலைவர்களை குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளனர்.
மனிதனுக்கு மனித பரவல் சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு ஆரம்பத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. உலக பொருளாதாரத்தை கட்டி போட்டு இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை நீக்குவது, மீண்டும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்வடைய செய்யும் என்று செவ்வாய்க்கிழமை, உலக சுகாதார அமைப்பின் ஊடக பேச்சாளர் தெரிவித்து இருந்தார்.