Header Ads

Breaking News
recent

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!


(பிராந்திய செய்தியாளர்எஸ்.ரி.பிரணவன்)
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தினை கழுவிக்கொண்டிருந்த கொண்டிருந்த இளைஞர் சங்க உறுப்பினர் செந்தூரன் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நாளை விசேட பூசை நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில் ஆலயத்தினைக் கழுவும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்ததாகவும் அதன் போதே மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்ததாகவும் தெரியவருகிறது.

செந்தூரன் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மறைந்த தலைவர் தங்கம்மா அப்பாக்குட்டியின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னரே குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
Powered by Blogger.