Header Ads

Breaking News
recent

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!



சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மார்ச் 10 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 15 ஆம் திகதிகளில் நிறைவடையும் சாரதி பத்திரங்களுக்கான செல்லுப்படியாகும் காலமே நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒழிப்பு நடவடிக்கை நிறைவடையும் வரை குறித்த சாரதி அனுமதிபத்திரங்கள் செல்லுப்படியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவேளை, தற்பொழுது அரசாங்கம் வழங்கும் அனைத்து ஆலோசனைகளையும் கேட்டுப் பின்பற்றுமாறும், மீறுபவர்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.